|
|
ஊரினைப்பிரிந்தாலும் வேரினை மறவாது உலகப்பந்தின் பல பாகங்களிலும் வாழுகின்ற
அளவையூர் மக்களே காலத்தின் வேகம், தலைமுறைகளின் இடைவெளி என்பன நம் புலம்பெயர்
வாழ்வில் இன்று அனைவரும் எதிர்கொள்ளும் விடயமாகிவிட்டது. இன்றைய எமது சந்ததியினரும்
எதிர்காலச் சந்ததியினரும் பலம் வாய்ந்த சந்ததியினராக மிளிர்வதற்கு மொழி, கலாசார
கட்டுமானம் மிக மிக அவசியம். சிதைவடையாத தூய கலை கலாசாரத்தை நாம் பெற வேண்டுமாயின்
நம் வாழ்வில் வேராகிய ஊரினில் இருந்து தான் பெற முடியும். இது மட்டுமல்ல மாறிவரும்
உலக வாழ்வியலுக்கு நமது ஊரினையும் அழைத்துச் செல்வது புலம்பெயர்ந்த எமது பாரிய
கடமையாகும். அன்பார்ந்த உறவுகளே! காலமெல்லாம் நம்மைக் காத்தருளும் கருணைக்கடலாம்
கும்பழாவளைப் பிள்ளையார் ஆலயத்தில் காலத்தின் தேவை கருதி பல திருப்பணி வேலைகள்
நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. ஊரினிலே வாழுகின்ற நம் உறவுகளின்
நிதிப்பங்களிப்புடன் புலம்பெயர்ந்த நாமும் திருப்பணி எனும் இரதத்தின் வடம் பிடித்து
இனிதாக நிறைவேற்றுவோம்.
மேற்படி ஆலயத்தில்
நடைபெறும் பூஜைகள்,
திருவிழாக்கள் போன்ற விபரங்களை உடனுக்குடன் அறிந்து கொள்ளவும் விழா நிகழ்ச்சிகளைப்
பார்வையிடவும் திருப்பணி விபரங்கள், நிதி வழங்குவோர் விபரங்கள் என்பவற்றினையும்
பார்வையிட இந்த இணையத்தளம் வழி அமைக்கின்றது.
அளவெட்டி கும்பழாவளை பிள்ளையார் ஆலய தர்மகர்த்தாக்கள் சபையின் பூரண கட்டுப்பாட்டில்
இவ் இணையத்தளம் செயற்படுகின்றது. |
|